About The Event
‘செந்தமிழ்ச் சொல்லால் செயலால்
தடம்பெருந் தோளால் தொடங்குக பணியை ‘
நம் பள்ளியின் முதல்வர் மற்றும் துணைமுதல்வரின் பரிந்துரையின் பேரில், , 12.1.2024 அன்று முத்தமிழ் எழுக!முழங்குக இசை!என்பதை மையமாகக் கொண்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவினை முன்னிட்டு, 11.1.24அன்று மாலை 4.30 மணியளவில், இறைவழிபாட்டுடன் பாரம்பரிய கோலப்போட்டி மற்றும் வண்ணக்கோலப் போட்டியும் நடைபெற்றது. இதில் வகுப்பு நான்கு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.
வகுப்பு இரண்டு முதல் ஒன்பது வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியரின், ஆடல், பாடல் நிகழ்ச்சிகளும் , பொங்கலைப் பற்றிய சிறப்புரைகளும் மேடையில் அரங்கேற்றப்பட்டன.
தொடர்நிகழ்வாக, முனைவர்;கவிஞர்.சி.தமிழ்ச்செல்வன் தலைமையில் வகுப்பு 6முதல்9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கவிமுழக்கம் நடைபெற்றது. தை மகளே வருக, கதிரவன் வருகை, காலமும் கடலலையும் யாருக்கும் காத்திரா, செய்வது துணிந்து செய், தமிழ் ஓர் அழகி என்ற தலைப்பில் கவிமுழக்கம் செய்தனர்.
பொய்க்கால் குதிரையாட்டம்,ஒயிலாட்டம் போன்ற நிகழ்ச்சிகளை நிகழ்த்திக்காட்டி, மெய்மறக்க வைத்து விட்டனர். இதில்,முத்தாய்ப்பான செய்தி என்னவென்றால், ஆசிரியர்களும் இசைக்கலைஞர்களின் இசைக்கேற்ப ஆடி, மாணவர்களை மேலும் மகிழ்ச்சியூட்டினர்.
நிறைவாக,மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், சகஊழியர்களுக்கும் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டு, இனிதே விழா நிறைவுற்றது.
Location
A.M.M. School, Kotturpuram, Chennai - 600085