Curricular

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

DSC_0011

About The Event

தீம்பாலாக இனிக்கும் முப்பாலாகிய திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியானது, தமிழ்மன்றம் சார்பில் 21.10.24 அன்று மாலை 2.45 மணியளவில்,அருணாச்சலம் முருகப்பா முருகப்பா பள்ளியில் நடைபெற்றது. வகுப்பு ஐந்து முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்கேற்றனர். முதல்வர்,துணைமுதல்வர் தலைமையேற்க,அவர்கள் வழியில் தமிழாசிரியர்களும் பொறுப்பேற்க,நடுவர்கள் அரங்கினில் வீற்றிருக்க,தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே தொடங்கியது.  

மாணவர்களின் மொழி வளர்திறனை மேம்படுத்தவும், தமிழ்மொழி மீது பற்றினை ஏற்படுத்தவும், இலக்கிய உணர்வினை வளர்க்கவும், மன்றத்தின் வாயிலாக நடத்தி வருகின்றோம்.வகுப்பு 5-மூன்று அதிகாரங்களும்,

              வகுப்பு 6,7,8 – நான்கு அதிகாரங்களும்,

              வகுப்பு 9,10 –  ஐந்து அதிகாரங்களும்

              வகுப்பு11,12-   ஆறு அதிகாரங்கள்        என வழங்கி,அதற்குரிய பயிற்சியும் அளித்தோம்.  மாணவர்கள், நடுவர்களை மகிழ வைத்தனர் என்றால் அது மிகையாகாது. வெற்றி வாகை சூடிய மாணவர்களுக்குத் தகுதிப்பாடுகள் வாயிலாக,எம்பள்ளியின் ஒருங்கிணைப்பாளர்,மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.

Location

A.M.M. School, Kotturpuram, Chennai - 600085

A.M.M. School, Kotturpuram, Chennai - 600085
Phone Number +91 44 24474495
Email ammschool@ammfoundation.org