ஆம் விருந்தே புதுமை.
அறம் எனப்படுவது யாது எனக் கேட்பின்
மறவாது இது கேள் மண்உயிர்க்குஎல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும்
அல்லது கண்டதுஇல்” என்கிறது மணிமேகலை.என்ற வாக்கிற்கிணங்க பத்தாம் வகுப்பு மாணவர்கள் 4.9.2023 அன்று சுற்றுப்புறத்தூய்மை பணியாளர்களுக்கு , உணவோடு, அவர்தம் உணர்வுகளையும் குழைத்து வாழையிலையில் விருந்து படைத்தனர். அவர்களின் தேவைக்கேற்ப பார்த்துப் பார்த்துக் கவனித்தனர். வாழையிலையில் சாப்பிடுவதனால் என்னென்ன நன்மைகள் என்பதினையும் எடுத்தியம்பினர். அதாவது,
வாழையிலையின் மேல் உள்ள பச்சைத்தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது.
இதில் இருக்கும் பல்வேறுவிதமான ஊட்டச்சத்துக்கள் உணவோடு கலக்க வாய்ப்பு உள்ளது.
பெரியோர்களே! இவ்விருந்தின் வாயிலாகத் தாங்களும் வாரம் ஒருமுறையாவது வாழை இலையில் சமைத்த உணவை தலைவாழையில் தங்களுடைய சுற்றம் சூழ சாப்பிட வேண்டுமென்றும் நல்லுரை வழங்கினர்.
அது மட்டுமா?
கூடுதலாக இருந்த உணவினை பெசன்ட்நகரிலுள்ள உதவும்கரங்களுக்கு , திருமதி.புனிதா ஆசிரியர் உதவியுடன் இம்மாணவர்கள், தங்களுடைய உதவிக்கரங்களை நீட்டினர்.
நன்றி.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
ஆகஸ்ட் 25 வெள்ளி காலம் 2.45 மணி - 5:00 மணி
அ. மு.மு பள்ளியில் ஆகஸ்ட் 25 வெள்ளிக்கிழமை எற்பாடு 2. 45
மணியளவில் தமிழ் இலக்கிய மன்ற விழா பேச்சுப்போட்டிகள் நடைபெற்றன. விழாவிற்கு உயர்திரு. துணை முதல்வர் அவர்கள் தலைமை தாங்கினார்கள். தமிழ்த்தாய் வாழ்த்துடன் தமிழ் மன்ற விழா தொடங்கப்பட்டது. தமிழ்த்துறை பொறுப்பாளர் அறிமுகஉரை நிகழ்த்த தமிழ் மன்றத்தலைவர் பா. சரண் வரவேற்புரை நல்கினார்.
மாணவ மாணவிகள் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை கலந்து கொண்டு தங்கள் பேச்சாற்றலை வெளிப்படுத்தினர். பேச்சுப் போட்டியின் தலைப்பு "கல்வி வளர்ச்சி நாள்" அல்லது "விடுதலைக்குப் போராடிய தமிழக வீரர்கள்” என்பதாகும். நடுவர்களாக திருமதி சித்ரா ஆசிரியை மற்றும் திருமதி ஜாஸ்மின் பியூலா ஆசிரியை ஆறு முதல் எட்டாம் வகுப்பிற்கும் ,திருமதி பானு ஆசிரியை மற்றும் திருமதி மாலதி ஆசிரியை 9 முதல் 12 ஆம் வகுப்பிற்கும் நடுவர்களாக இருந்து விழாவினைச் சிறப்பித்தனர். தமிழாசிரியர் அனைவரும் மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துகளைக் கூறினார்கள். செயலாளர் ஸ்ரீ சாம்பவி நன்றியுரை வழங்கினார். நாட்டுப்பண்ணுடன் தமிழ் இலக்கிய மன்ற விழா இனிதே நிறைவுற்றது.
![]() |
![]() |
படிக்காதமேதை என்று அழைக்கப்படும் கர்மவீரர் காமராசரின் பிறந்தநாள் விழாவினை ஏ.எம்.எம். பள்ளியில் சிறப்பாகக் கொண்டாடினோம்.
கொண்டாடியவிதம் பின்வருமாறு.-
தக்ஷின்சித்தார்த்-வகுப்பு 4, மற்றும் செந்தூரன்வகுப்பு-9 இவர்கள் இருவரும் தென்னாட்டுக்காந்தியின் உருவப்படத்திற்கு மலர்களைத்தூவி வழிபட்டு விழாவினைத் தொடங்கினர்.
வகுப்பு 4 ‘ஆ’ பிரிவு மாணவர்களாகிய தஷின் மற்றும் ஸ்ரீஹரன் , காமராசரின் இளமைப்பருவம் மற்றும் இவருடைய ஆட்சிக்காலம் பொற்காலம் என்று சீர்தூக்கிப்பேசினர்.
அடுத்ததாக,ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் இலவசக் கல்வித்திட்டத்தை காமராசர் அறிமுகப்படுத்தியதையும், மதியஉணவுத்திட்டத்தைக் கொண்டு வந்ததையும் குறுங்கலந்துரையாடலாக மெய்ப்பித்தனர். குழுவாக அவரைப் போற்றும் விதமாக ஒருபாடலையும் பாடி, விழாவினை இனிதே நிறைவுப்படுத்தினர்.
![]() |